நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்க வந்த தேர்தல் அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் இடையே ஏற்பட்ட மோதலால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வலியுறுத்தி குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய மாணவர் படை, விடியல் ஆரம்பம், சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பேரணியை குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவள்ளி துவக்கி வைக்க அரசு பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு இருக்கையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உதவி கலெக்டர் அந்தஸ்த்தில் உள்ள தன்னை, தலைமை ஆசிரியர் மதிக்கவில்லை என கடிந்துெகாண்டார். தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உரிய மரியாதை தந்ததாகவும், இதை அவர் கவனிக்கவில்லை எனவும, உயர் அதிகாரிகளுக்கு பணிந்து பதில் சொன்னால் போதும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா அங்கிருந்த ஆசிரியர்களும், அதிகாரிகளையும் சமதானம் படுத்தினார். பின்னர், பேரணி துவக்கிவைக்கப்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரும், தேர்தல் அதிகாரியும் மோதி கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.