கோவைையை சேர்ந்த ராஜ்குமார் என்ற ஆசிரியர், ஊடகங்கள் வாயிலாக முக்கிய அரசியில் கட்சிக்கு ஆதரவு திரட்டிய அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் அவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கடந்த 14ம் தேதி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு முக்கிய அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், திமுக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகி என்ற பெயரில் பேட்டி அளித்துள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் செயலர் உத்தரவுப்படி கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் முதல் பணியாளர் வரை மத்திய அரசு தேர்தல் நடவடிக்கை உட்பட்டு, பணியாற்ற கடமைப்பட்டவர்கள் என அவா் கடிதத்தில் சுட்டிகாட்டினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாகவும், சங்கங்கள் வாயிலாகவும் அரசியல் கட்சி ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ வாக்கு சேகரிப்பு மற்றும் விமர்சிப்பது உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, லட்சகணக்காக மக்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன் என பேட்டி அளித்த ஆசிரியர் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளுக்கு எதிரானதாகும், என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பேட்டி தொடர்பான ஆதாரங்கள் குறுந்தகடு வாயிலாக இணைத்துள்ளதாக அவா் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.