செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ம் தேதி தமிழ் அகராதியியல் நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பு 2020-2021ம் ஆண்டில் தமிழக அகராதியியல் நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில்
கலை சொல்லாக்க போட்டியும், அகராதியில் தொடர்பாக பொருண்மையில்
“சொல்-பொருள்-படம்” என்ற வகையில்
ஓவிய போட்டியும் நடத்தப்பட உள்ளன.
ஓவியப்போட்டி:
ஓவியப்போட்டி என்பது மாணவர்கள் இடையே தமிழ் சொற்களின் அறிதலையும், அவற்றிற்கான பொருள் புாிதலையும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். சொற்களின் பொருள் அறிந்து, அதற்கேற்ற படம் வரைவதன் மூலம் அவர்களின் ஓவியத்திறனையும் ஊக்குவிக்க முடியும்.
கலைச்சொல்லாக்க போட்டி:
கலைச்சொல்லாக்க போட்டி என்பது மாணவர்கள் இடையே ஆங்கில சொற்களுக்கு இணையான புதிய தமிழ் சொற்களை வடிவமைக்கும் ஆற்றலை வளர்த்தெடுப்பதே ஆகும்.
உதாரணத்திற்கு:
- Facebook - முகநூல்
- Twitter - கட்டுரை – கீச்சசம்
இதன்படி, இந்த போட்டிகள் பிப்ரவரி 6ம் தேதி நடக்க இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு, தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் மற்றும் பள்ளி விவரங்களை வரும்
17ம் தேதிக்குள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போட்டியிலும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ
.10 ஆயிரம், இரண்டாவது பரிசாக
ரூ.5 ஆயிரம் மற்றும்
பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய கொடுக்கப்பட்ட இந்த எண்ணில் தெரிந்துகொள்ளலாம்:
044-29520462/044-29520509/9585013612 அல்லது 14469 கட்டணமில்லா அழைப்பு மைய எண்ணிலோ அலுவலக நேரத்தில் (
காலை 10 மணி முதல் 5.30 மணி வரை).
போட்டிகளுக்காக நெறிமுறைகள்:
- போட்டி நடைபெறும் நாளான பிப்ரவரி 22ம் தேதி காலை 10 மணிக்குள் கொடுக்கும் இணைய இணைப்பினை இணைத்துவிட வேண்டும்.
- கொடுக்கப்பட்ட காலத்திற்குள் போட்டியை நிறைவு செய்துவிட வேண்டும்.
- ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலும் தமிழ் பாடத்திலுள்ள இலக்கிய வரிகளிலிருந்து ஓவியம் போட்டிக்கான வினா இடம்பெறும்.
- பாடங்களுக்கு வண்ணம் தீட்ட வேண்டும்.
- சொல்லாக்கப் போட்டி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வினாக்களுக்கான விடைகளை உரிய நேரத்தில் எழுதி முடித்து agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
- இரு போட்டிகளிலும் நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது. இவ்வாறு, இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.