You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி

arts college admission counselling

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று 2025-2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும்பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் ேநற்று நடந்தது.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாடு முதல்வர் கல்லூரி பயிலும் மாணவர்களை திறன்மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர் கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

தொழில்நுட்ப திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

முதல்வரின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினர். இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனர்.