தமிழகத்தில் நடுநிலை பள்ளி வளாகத்தில் செயல்படும் மழலையர் பிரிவில் பணியாற்றும் முன்பருவ கல்வி ஆசிரியர் முழு ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர் மனசு திட்டம் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பருவ கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசிடம் இருந்து குறைந்த சம்பளமாக ரூ 5000 மட்டுமே பெற்று வருகின்றனர். ஏற்கனவே, ஊதிய உயர்வு, அரசாணையின்படி அரைநாள் வேலை உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, கல்வி அமைச்சருக்கு மாநாடு நடத்தினர்.இந்த நிலையில், அவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் மாத இடையில் நிறைவடைவதால், அவர்களுக்கு வேலை நாட்களுக்கான ஊதியம் மட்டும் கிடைக்கும். மேலும், அடுத்த மாதம் ஊதியம் அவர்களுக்கு கிடைக்காது என்பதால், இந்த அரை மாதம் சம்பளம் அவர்களின் செலவினங்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருக்கும். இதனை கருத்தில் முன்பருவ கல்வி ஆசிரியர்கள், ஏப்ரல் மாதத்திற்கான முழு ஊதியம் வழங்கப்படும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், சிகரம் சதிஷ் அவர்களுக்கான முழு ஊதியம் பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார்.