மலை சுழற்சி கலந்தாய்வு 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம்
சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அரசாணை 107 மூலம் தொடக்க, நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரிகள், தலைமை ஆசிரியர்களுக்கான மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்விற்கான நடைமுறைகளை வௌியிட்டது.
அதில் மலைச்சுழற்சி மாறுதல்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
மலை சுழற்சி கலந்தாய்வு முக்கிய விதிகள்
மலைச் சுழற்சி முறை மாறுதல் நடைமுறையில் உள்ள ஒன்றியங்களில் பொது மாறுதலுக்கு முன்னதாகவே மலை சுழற்சி மாறுதல்கள் (முதல் நாளிலேயே நடத்தப்பட வேண்டும்)
அனைத்து வகை ஆசிரியர்களும் மலைப்பகுதிகளில் பணியாற்ற பெரிதும் தயக்கத்துடன் உள்ளனர் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்த ஓராண்டு காலம் மலைப்பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் நேர்வில் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று, அதே பள்ளியில் தொடர அனுமதிக்கலாம். அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (இடைநிலை, பட்டதாரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்) இது பொருந்தும்.
மேலும் மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக படிக்க – இங்கு கிளிக் செய்க
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஏழு மாவட்டங்களான வேலூர், சேலம், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 20 வட்டாரங்களில் ஆசிரியர்களுக்கான மலை சுழற்சி கலந்தாய்வு நடந்தது. இதில் 495 ஆசிரியர்கள் இடமாற்றம் மலை சுழற்சி கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர, ஏழு மாவட்டங்களில் 436 பேர் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் பெற்றுள்ளனர்.
