செய்தி மக்கள் தொடர்புதுறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009- 2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களில் ரூ 48.95 கோடி நிலுவை தொகையினை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்கள் அடையாள காண இயலாததாலும் ரூ.48,95,00,000 ஐ சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது