ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கலசப்பாடி, ஈரோடு மாவட்டத்தில் தலமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிளாக்காடு, பாச்சேரி, சேலம் மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டு புதூர், நீலகிரி மாவட்டத்தில் தேவாலா, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் மன்னூர் நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.