Tamil Nadu Government School Teacher Salary | அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பாதிப்பு
Tamil Nadu Government School Teacher Salary
தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளத்தை இழந்து வருகின்றனர் என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் கே.காமராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பழைய பென்ஷன் திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, உயர்கல்விக்கான ஊக்க உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
Read Also: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சட்டசபை தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை சிறிதும் கொண்டு கொள்ளாததால், திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி ஜனவரி 5ம் தேதி மாலை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.
மேலும் 2009 மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வித சம்பளமும், 2009 ஜூன்க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மற்றொரு சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால் அடிப்படையில் சம்பளத்தில் மாதத்திற்கு 3,170 ரூபாயை 20 ஆயிரம் ஆசிரியர்கள் இழந்து வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிைல ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின் இதை நன்கு பரிசீலனை செய்து தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு அவர் கூறினார்.