பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024-2025ஆம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா கொண்டாட நிதி வழங்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும், ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் இத்தகைய திரைப்பட பாடல்கள்கள் ஒளிப்பரப்புவது சாதி, ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க ேவண்டும எனவும் புகார் மனு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. எனவே பள்ளி ஆண்டு விழாவில் மேற்காண் புகார்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இதுபோன்ற நிகழ்வுகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின் கீழ் ஓழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.