வருவாய் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இம்மாதம் பள்ளி திறப்பதற்கான அரசாணை எண் 30 ஐ வெளியிட்டுள்ளது.
மருத்துவ குழு ஆலோசனை மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்னர், தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்தது. இதுதவிர பள்ளியில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, தமிழக அரசு பள்ளி திறப்பு குறித்து அரசாணை எண் 30 நேற்று வெளியிட்டுள்ளது.