You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பள்ளி மாணவர்களுக்கு கேக் முதல்வர் விஜய் அறிவிப்பு

CM Vijay announces cake to school students

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும், நல்வாழ்வையும் போற்றும் வகையில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.  குறிப்பாக, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு புதிய முன்னெடுப்பாக, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் 61.84 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஸ்பான்ச் கேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 9.27 கோடி இதற்காக செலவிடப்படுகிறது. இந்த கேக் 45 கிராம் எடை கொண்டது. 

அதன்படி தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது. குறிப்பாக, கேக் தரத்துடன் 30 நாட்கள் வரையிலான காலாவதி நாட்கள் இருக்க வேண்டும் என விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழக வரலாற்றில் குழந்தைகள் தினத்தன்று பள்ளி குழந்தைகளுக்கு ஒரே நாளில் கேக்க வழங்குவது முதல் முறை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.