தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகளை முதலில் எண்ணப்பட்டு முன்னணி நிலவரத்தை அறிவித்துவிட்டு, வாக்களர்களின் வாக்குகளை எண்ணவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுப்பட்டு நல்ல முறையில் தேர்தலை நடத்தியுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை. அதற்கு காரணம் தபால் வாக்குகளை முறையாக எண்ணி முன்னணி நிலவரத்தை அறிவிக்கப்படாமல் இருப்பதுதான். உதாரணத்திற்கு, சென்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மையங்களில் தபால வாக்குகள் எண்ணவே இல்லை. இந்தநிலை மாறவேண்டுமானால் எங்களை அங்கிகரீக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் தபால் வாக்குகளை முதலில் எண்ணி அதன் முன்னணி நிலவரத்தை அறிவித்த பின்னர்தான், வாக்களர்களின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.