தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர், சா. அருணன் வெளியிட்ட அறிக்கை,
வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மூன்று பயிற்சி வகுப்புக்கு பின், வாக்குச்சாவடி பணிக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு முறையும் மாநில தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிக்க முறையான வசதிகள் ஏற்படுத்தி தராதது வேதனையின் உட்சபட்சம். இதனால், மேல் மற்றும் உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, அந்த உத்தரவில், தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளித்து அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளததை, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் பயிற்சி நடத்தும் அலுவலரே சான்றொப்பமிட்டு படிவத்துடன் தபால் வாக்கு சீட்டு வழங்கி சுய கையொப்பம் பெற்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே, நீதிமன்றம் உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் என 100% சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்ய முடியும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள, படிவம் 12ல் சான்றொப்பமிடும் அலுவலர் கையொப்பம் பெற்று தான் வாக்களிக்க வேண்டும் என்றால் 100% சதவீதம் வாக்களிக்க இயலாத நிலை ஏற்படும், சான்றொப்பம் பெற அலைக்கழிக்க படுவதாலேயே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெரும்பாலனோர் வாக்களிக்க முடிவதில்லை. எனவே, பழைய விதியை மாற்றி பயிற்சி வகுப்பு நடத்தும் அலுவலர் முன்கூட்டியே கையொப்பமிட்ட படிவத்தை பூர்த்தி செய்து வாக்களிக்கும் பணியாளர்கள் சுய கையொப்பமே போதுமானது என தேர்தல் ஆணையம் அறிவித்து, இண்டாம் கட்ட பயிற்சியில் வாக்களிக்கும் விதமாக அவர்கள் பணி செய்யும் இடத்திற்கே படிவங்களை வழங்க வேண்டும் எனவும், மூன்றாம் கட்ட பயிற்சியில் 100 சதவீதம் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஒரே தொகுதியில் அவர்கள் பணி செய்யும் இடம் மற்றும் வசிப்பிடத்தின் பக்கத்தில் உள்ள மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் பணி வழங்க வேண்டும், ஏனென்றால் தேர்தல் பணி செய்யோர் பெரும்பாலானோர் பெண்கள் இரண்டு இரவு தங்கி பணி செய்ய வேண்டும் நிலை ஏற்படுவதால், தேர்தல் ஆணையம் இதையும் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் பணியில், மாற்றுத்திறன் ஊழியர்கள், ஆசிரியர்கள், மகப்பேறு ஊழியர்கள் ஆசிரியைகள், காசநோய், புற்றுநோய், மூச்சி திணறல், இருதய பிரச்சனை உட்பட கடினமான நோய் உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். வாக்குசாவடி மையங்களில், அனைவருக்கும் குடிநீர் வசதி, குளிப்பதற்கு தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதி செய்துதர வேண்டும். சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுகொள்கிறது.