தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். காரணம், காலையில் பள்ளிக்கு வருதற்கு முன் சுகாதாரத்துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிக்கு வருவார்களா, பள்ளியில் இருந்து வெளியில் செல்லும்போதும் கட்டுப்பாடு பின்பற்றி செல்வார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பெரும்பாலானோர் செலுத்திய நிலையில் மீதம் உள்ள அரசு ஊழியர்கள் 100% விழுக்காடு ஒருநாள் சிரமத்தை பெரியதாக எண்ணாமல் எதிர்காலத்தை மனதில் வைத்து அனைவரும் தபால் வாக்கினை செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.