தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கழகத்தின் மாநில தலைவர் சௌந்திரராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்தால் நலமாக இருக்கும். கொரோனா பாதிப்பு உயிரிழப்பு என்பது மிகவும் துயரமான விஷயமாக உள்ளது. எனவே அரசு ஊழியர்களின் நலன் மற்றும் குடும்ப நலன் கருதி ஏற்கனவே 50 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போது என்ற நிலையை மீண்டும் அமுல்படுத்தி 50 சதவீதம் ஊழியர்கள் வருகை புரிய தக்க வகையில் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதைபோன்று அரசு ஆசிரியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.