மாநில அரசு ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வூதிணுயம் திட்டம் என்பது குறித்து ஆராய, தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஏப்ரலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடைேய, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஜனவரியில் தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஒய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் 2003 ஏப்ரலுக்கு முன் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக்கோரி போராட்டங்கள் நடத்தி வந்தனா்.‘
இந்த நிலையில், கடந்த ஜனவரியில் மத்திய அமைச்சரவை ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட, குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படீ ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் முன்னாள் இயக்குனர் சண்முகம், நிதி துறை உறுப்பினர் செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் அடங்கிய குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழு, மாநில அரசின் நிதிநிலை மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் வைத்து, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒய்வூதிய முறையை பரிந்துரை செய்யும். இந்த குழுவின் பரிந்துரைகளை, ஒன்பது மாதத்திற்குள் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.