தமிழக அரசு பகுதிநேர ஆசிாியர்கள் முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தொிவித்துள்ளதால், அவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு, அரசு பள்ளிகளில் ைதயல், இசை, ஒவியம் உள்ளிட்ட பாடத்திட்டங்களில் ரூ 5 ஆயிரம் சம்பளத்துடன் தற்காலிக முறையில் 16500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் மட்டுமே பணி ஒதுக்கப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். பணி ஒய்வு, இறப்பு, விருப்பமின்மை உள்ளிட்ட காரணங்களால், தற்ேபாது 12,000 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தொடர் போராட்டம் காரணமாக, திமுக தோ்தல் அறிக்கையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 12,500 சம்பளம் வாங்கும் அவர்கள், இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், தமிழக அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த நிலையில், அவர்கள் முதல்வர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர். தற்போது தலைமை செயலகத்தில் இருந்து ஆசிரியர்களின் செல்போன்களுக்கு குருஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதில், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று வந்துள்ளது. இது பகுதிநேர ஆசிாியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.