தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அவர்களால் கொண்டுவரப்பட்டது இலவச மடிக்கணினி (#tamilnadu free government laptop scheme) வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம், 12ம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இந்த மடிக்கணினி உயர்கல்வியில் பயன்படுத்த வேண்டும் என்பதே.
சரி எப்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்றால் அதிமுக ஆட்சி 2011ம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந்த இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2017-18ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து மாணவர்கள் மடிக்கணினி வழங்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக மனு வழங்கினர். போராட்டம் நடத்தினர். எந்த பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது ஒருவர் மடிக்கணினி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூரை சேர்ந்த காவுதீன் ஐகோா்ட் மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த மனுவி்ல், கடந்த 2017-18ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததால், அவர்களால் நீட் உள்ளிட்ட தேர்வுக்கு தயராக முடியவில்லை. 2017-18ம் கல்வியாண்டில் மடிக்கணினி கிடைக்காத மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி #Sanjib Banerjee, நீதிபதி டி.எஸ். சிவஞானம் #T. S. Sivagnanam ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே விடுபட்ட மாணவர்களுக்கு, கொள்முதல் செய்யப்பட்டு, விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மாணவர்களுக்கு மடிக்கணினி முக்கியம் என்பதால், அவர்களுக்கு தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க பரீசிலிக்க வேண்டும் என அவர்கள் வழக்கை முடித்துவைத்தனர்.