You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

நல்லாசிரியர் விருது பேரம் ஆரியர்கள் அதிர்ச்சி

tn good teacher award issue

பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருது வழங்க பேரம் பேசப்படுவதாக ஆசிரியர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிாியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர் திறன், மதிப்பெண், மாணவர்களுடன் நல்லுறவு உள்ளிட்ட தகுதி அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் திறனாய்வு பரிந்துரை பேரில், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக தேர்வுக்குப்பின் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். 

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அரசியல் பின்புலம், எம்பி, எம்எல்ஏ பரிந்துரை விளம்பர விரும்பி அடிப்படையில் இந்த விருது வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால், விருது நேர்மையாக வழங்கப்படும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் 42 ஆசிரியர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். 

இதற்கிடையில், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பம் செய்யுங்கள், நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என கடலூர் மாவட்டத்தில் உள்ள தவெக நிர்வாகிகள் ஆசிரியர்களிடம் பேரம் பேசி வருவதாக, குறிப்பாக அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற சிலர், அமைச்சரிடம் கூறி விருதுக்கு பரிந்துரைப்பதாகவும், அதற்காக லட்சம் ரூபாய் செலவாகும் என கூறிவருவதாகவும் தெரிகிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி சூரியகுமார் கூறும்போது, இந்த முறையும் தகுதியான ஆசிரியர்களுக்கு நல்லாசிாியர் விருது கிடைக்காத சூழல் உள்ளது.

ஆனால், இதற்கு மறுப்பு தவெக நிர்வாகிகள் தெரிவித்து, யாரும் தங்களிடம் பேரம் பேசவில்லை, யாரும் விருதுக்கு பரிந்துரை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.