Tamil Nadu Free Textbook News | அரசு இலவச பாடபுத்தகம்
Tamil Nadu Free Textbook News
சிவகாசியில் உள்ள தனியார் ஓட்டலில், பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்க கலந்துரையாடல் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ லியோனி நிருபர்களிடம் கூறியதாவது,
3 ஆண்டுகளாக அச்சு கூலியில் மாற்றம் இல்லாமல் அச்சடிப்பு பணி நடக்கிறது. அச்சக உரிமையாளர்கள் விலைவாசி உயர்வால், 30 சதவீத கூலி உயர்வு கேட்டுள்ளீர்கள். 20 முதல் 25 சதவீத கூலி உயர்வுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் ஏற்பட்ட கூடுதல் பயண செலவை தருவதற்கு பாடநூல் கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையான நமது வேலையை நாம்தான் செய்வோம் என்பதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
Read Also: ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைதன்மை சான்றிதழ்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வந்தபோது, தமிழக புத்தகங்கள் உலகதரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார். இதுபோன்ற தரமான புத்தகங்கள் சிவகாசியில்தான் அச்சடிக்க முடியும் என்று நான் கூறினேன். வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தை விட அதிக பணிகள் அச்சகங்களுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.