தொடக்க கல்வித்துறை தனித்து செயல்பட வேண்டும்
தொடக்க கல்வித்துறை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வு பணி மாறுதல் மற்றும் தற்போது நடைபெறும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.
மேலும் அவர், மாவட்ட விட்டு மாவட்டம் பணி மாறுதல் அளவிட முடியாத காலதாமதங்களுடன் நடைபெறுவது தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன்பு உரிய காலத்தில் கலந்தாய்வு நடைபெற்று வந்ததாகவும், தொழில்நுட்பம் என்ற பெயரால் எமிஸ் மூலமாக நடைபெறும் கலந்தாய்வு காலதாமதமாகவே நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
Read Also This: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தள்ளிவிடும் நிதிநிலை அறிக்கை
மேலும் எமிஸ் தளத்தை கையாளுகின்ற நிர்வாக பொறுப்பு, தொடக்க கல்வித்துறையை கையாளுகின்ற நிர்வாக பொறுப்பு இரண்டும் தனித்தனியே செயல்பட்டு வருவதால், கூடுதல் காலதாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது. எமிஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அதை நேரடியாக கையாளும் வகையில் தொடக்க கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை பழைய முறையிலேயே மாவட்ட பணி மாறுதல்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நிர்வாக வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய மாவட்டங்களும், புதிய தாலுக்காக்களும் ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள தொடக்க கல்வி நிர்வாகத்தையும், பள்ளி கல்வி நிர்வாகத்தையும் இணைந்து செயல்படுத்துவது என்பது எதிரான பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும், தொடக்க கல்வித்துறை தனித்து செயல்படும் வகையில் உரிய அரசாணைகள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.