தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரைக்கான அட்டவணை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான்று அதாவது ஏப்ரல் 19ம் தேதி, தனியாா் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்ததுள்ளார். அதன்படி தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சத்ய பிரதா சாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.