You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

விரைவில் மற்ற வகுப்புகள் திறப்பா?, 40 நிமிடத்தில் 60 வகையான உணவு - மாணவி அசத்தல்,

விரைவில் மற்ற வகுப்புகள் திறப்பா?, 40 நிமிடத்தில் 60 வகையான உணவு - மாணவி அசத்தல்,

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, தேர்வு அட்டவணை வெளியிடும்போது வழங்கப்படும். நீட், ஜேஇஇ பாடத்திட்டங்களை குறைப்பது மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும், தற்போது வரை நீட் தேவை இல்லை என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும், மற்ற மாநிலங்களை விட ஹைடெக் ஆய்வகம் உள்ளது.

மாணவர்களுக்கு க்யூஆர் கோடு, யூ-டியூப் சேனல் மற்றும் 12 தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சா்தான் முடிவெடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பு திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் கவனித்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து கல்லூரிகளும் வரும் 8ம் தேதிகள் திறக்கப்படும் எனவும், 9 மற்றும் 11 வகுப்புகள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூத்தாம்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தர்ஷணி (13) இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறைந்த நேரத்தில் அதிக இயற்கை உணவுகளை சமைத்தாா். அதன்படி 40 நிமிடங்களில் 60 வகையான உணவை சமைத்து அசத்தினார். மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

காரியப்பட்டி பணிமனையில் இருந்து பாப்பணம் வழியாக முக்குளம், தொடுவன்பட்டி, மீனாட்சிபுரம் மற்றும் புல்லூர் வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்ட எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரிக்க தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 37,111 அரசு பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்களை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 2 சதவீத ஆசிரியர் பணி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, அமைச்சு பணயிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய தகுதி உடையோர் பட்டியலை தயாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலூர் காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மது அருந்துவிட்டு, ஆசிரியை மீது பீர்பாட்டில் வீசிய இரண்டு முன்னாள் மாணவர்கள் கைது செய்தனர்.