ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுகிறது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதில் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை போற்றும் விதமாக, 386 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ 10 ஆயிரம், வெள்ளிப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. DEE teachers' award name list pdf - Click Here DSE teachers' award name list pdf - click hereஇந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை வண்டலூரில் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த விழா விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேறு்று விருதுகளை வழங்க உள்ளார். இதில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.