தமிழ்நாடு நாளை முன்னிட்டு, சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 9ம் தேதி நடக்கிறது.
தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்ப்படுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெறுவர். அதன்படி, சென்னையில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜூலை 9ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். வெற்றிபெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தலா ரூ 10,000, ரூ 7,000 மற்றும் ரூ 5,000 வழங்கப்படும். கட்டுரை போட்டி ஆட்சிமொழி தமிழ் மொழி என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி குமரி தந்தை மாாச்ல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞா் கலைஞர் கருணாநிதி ஆகிய தலைப்பில் நடைபெறும். பரிசுகள், பாராட்டு சான்றிதழ் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் வழங்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.