அரசு தொடக்க பள்ளிகளில் கணினி பாடம் அறிமுகம் செய்ய வேண்டும், கிட்டதட்ட 50 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் முறையிலாவது வேலைவாய்ப்பு அளித்திட கோரியும் கடந்த பத்து ஆண்டுகளாக அமைதி வழியில் தங்களது கோரிக்கைகளை மனு, முறையீடு என்று மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த வேலையில்லா கணினி ஆசிரியர்கள்.
இதன் ஒரு பகுதியாக கடந்த மே 3ம் தேதி 2018ம் ஆண்டு, தமிழ்நாடு பி.எட் கணினி வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தங்களது ஆறு கோரிக்கைகளான, அரசு பள்ளி மாணவர் கணினி அறிவியல் பாடத்தில் தொடக்க கல்வியில் அறிமுகம் செய்ய வேண்டும், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயம் அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும், அரசு பள்ளியில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு கணினி ஆசிரியராவது நியமிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கிட்டதட்ட மூன்றாண்டு விழிப்புக்கு பின், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, மத்திய அரசு, சங்க செயலாளருக்கு ஒரு பதில் மனு அனுப்பியது, அதில், கணினி ஆசிரியர்கள் பிரச்னைகளை ஆராயவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஒரு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன், கூறும்போது, வரும் மே மாதம் வந்தால், நாங்கள் மனு அளித்து மூன்று ஆண்டு காலமாகிறது. தற்போதுதான், மத்திய அரசு நாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதில் மனு அனுப்பியுள்ளது. கணினி ஆசிரியர்கள் முந்தைய செய்தியை படிக்க இந்த லிங்க் கிளிக் செய்யவும். https://tneducationinfo.com/annoucement-of-6-to-8-computer-science-subjects-teachers-reaction-tamil-nadu-governement-introduce-computer-subject-from-class-6-to-10/ அதில், மத்திய அரசு, தமிழக அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்று வேண்டுகோளாகத்தான் வைத்துள்ளதே தவிர ஒரு உத்தரவாக பிறப்பிக்கவில்லை. இதனால், தமிழக அரசுதான் குழு அமைக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும். இந்த பதில் மனு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை, பெயரளவில் எங்களை சமாளிக்கும் நோக்கில், தேர்தல் மனதில் வைத்து, இந்த பதில் மனு தயார் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதனால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பற்ற கணினி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எதிர்வரும் தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கை வலுவாக வைக்க திட்டமிட்டுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஓரு அமைப்போ, பொதுமக்கள் சார்போ அல்லது தனிமனிதரோ அவர்களது பிரச்னையை அரசாங்கத்திடம் முன்வைக்கும்போது, வருட கணக்கில் பதில் அனுப்ப காலம் எடுத்துக்கொண்டால், அவர்களின் பிரச்னை எப்போது தீர்வு ஏற்படும் அல்லது குறைந்தபட்சம் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு ஒரு சமானியன் அறிந்துகொள்ள முடியும் என்பது கணினி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.