தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூாிகளுக்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.
இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்து வந்தனர். குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கு சுமார் 25,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கிடையில், உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், கூறியதாவது, தனியார் பி.எட் கல்லூரிகள் ரூ.30 ஆயிரம் மேல் மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூல் செய்யக்கூடாது. பி.எட் கல்லூரிகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்தால், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். மேலும், தனியார் கல்லூரிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டும்தான் இந்தாண்டு மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டும். அதிகமான கட்டணங்கள் வசூல் செய்யக்கூடாது என அவர் தெரிவித்தார்.