You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

முதலமைச்சர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

Tamil Nadu CM Trophy last date 2025

செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கை - தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (Online Registration) 14.07.2025 முதல் https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 இலட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 

முன்பதிவிற்கான கடைசி நாள் 16.08.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பினை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி. கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 20.08.2025 தேதி இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.  "ஆடுகளம்" தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.