அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசுப் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணவர்கள் (500 மாணவர்கள் –- 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ 10 ஆயிரம் (ஒரு மாதத்திற்கு ரூ 1000) என வழங்கப்படும்.Read Also: கணித திறனாய்வு தேர்வு ரூ 2000 பாிசுதமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருத்தாள்களாக நடைபெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல்தாள் காலை 10 மணி முதால் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ 50 செலுத்தி டிசம்பர் 9ம் தேதிக்குள் மாணவர்கள் பயிலும் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.