Tamil Nadu CM Search Exam Result | dge.tn.gov.in| முதலமைச்சர் திறனாய்வு தேர்வு டிசம்பர் 1ல் வெளியீடு
Tamil Nadu CM Search Exam Result
பிளஸ்1 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமா வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கயைில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1,27,673 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி காலை 11 மணியளவில் தேர்வுதுறை இணையதளத்தில்
www.dge.tn.gov.in வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் இந்த இணையதளத்தில் காணலாம்.
இந்த தேர்வின் வாயிலாக, 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 மாதங்களுக்கு உதவி்த்தொகையாக ஒரு கல்வியாண்டு ரூ 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த உதவித்தொகைக்கான தேர்வு பட்டியல் விவரங்களும் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும்,
என அதில் கூறப்பட்டுள்ளது.