You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - தமிழக முதல்வர் உறுதி

cm stalin inspcts school education

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் அளித்த அறிக்கை சுருக்கம், 

ெதாழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும், பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகிறது. வேலை வாய்ப்பு பெருக்கும் வகையில், திறன் மேம்பாட்டு பயற்சியும் அளிக்கப்படுகின்றன. கடந்த மூன்று வருடங்களில் 32,774 நபர்களுக்கு பல்வேறு அரசு துறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞர்கள் பணிநியனம் பெற்றனர். மொத்தம் 65,483 இளைஞர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், இதுவரை 3,06,459 நபர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வரும் ஜனவரி 2026க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசு பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17,595 பணியிடங்கள், ஆசிரியர் தோ்வு வாரியம் மூலமாக 19,260 ஆசிரியர் பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாாியம் மூலமாக 3,688 பணியிடங்களும் நிரப்பப்படும். இதுதவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும். மொத்தம் 75000 மேற்பட்ட அரசு பணியிடங்கள் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவாி மாதத்திற்குள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.