அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பம் வரவேற்பு | Tamil Nadu Best Science Teacher Award Details 2022

அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பம் வரவேற்பு | Tamil Nadu Science Teacher Award Details 2022

To Join In our Telegram Group – CLICK HERE

தமிழக அரசின் அறிவியல் நகரத்தின் அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

மாணவ சமுதாயத்தின் நலனுக்கான இன்றியமையாது பணியாற்றும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்கும் வண்ணம் அரசாணை எண் 192 உயர் கல்வித்துறை நாள் 13.08.2018ன்படி ‘சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது‘னை வழங்குவதற்கு அறிவியல் நகரத்திற்கு அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிர் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும், அதன் ஊடாக மாணவர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும், வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000க்கான காசோலை (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

ALSO READ THIS| Tamil Initials and Signature Government Order Download

இந்த விருதிற்கு கீழ்கண்ட ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கணிதம்,

இயற்பியல்,

வேதியியல்,

உயரியல் மற்றும்

புவியியல்/கணினி அறிவியல்/ வேளாண் நடைமுறைகள்

இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ் வடிவில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிாித்து வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்க ஏதுவாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வகை பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளி கல்வித்துறை அவர்களின் வழியாக அறிவியல் நகரத்திற்கு மார்ச் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

Latest Posts