சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூாி மாணவர்கள் கூடுதல் கல்வி கட்டணத்தை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், 45 நாளான நேற்று நீடித்தது.
போராட்டத்தை ஒடுக்க, மருத்துவ கல்லூரி காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, விடுதிகளை காலி செய்யுமாறு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்து, தொடர் போரட்டங்கள் செய்து வருகின்றனர். இதையடுத்து, உணவகம் மூடப்பட்டது, மதிய உணவும் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, போரட்டம் நடந்த இடத்திலேயே, தட்டேந்தி கண்டன முழுக்கங்களை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக எழுப்பினர். இதுகுறித்து, மாணவர்கள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், போராட்டத்தை ஒடுக்க, நிர்வாகம் மாணவர்களுக்கு மறைமுகமாக பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகிறது. போலீசார் மூலம் மறைமுகமாக அச்சுறுத்தல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இருந்தாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.