நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் உள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களும் அவர்கள் குடும்பத்தினரும் எங்கள் அனைவரும் ஆதரவையும் திமுக கட்சிக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் முழு ஆதரவு தருகின்றோம்.
கலைஞரின் கலைத்திட்டம்(அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்) மாற்றம் வருகின்ற கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் !!!

கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தை மட்டும் மாற்றி மாற்றி அமைத்த முந்தைய அரசு கலைத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டு வரவில்லை. இதற்கெல்லாம் முன்னோடியாக மாண்புமிகு மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத் திட்டம் ஆறாவது படமாக மாற்றி அமைத்து கலைத்திட்டத்தில் முதல் முறையாக மாற்றம் செய்து கல்வியை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல வடிவத்தை 2011ம் ஆண்டை முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக அரசு. அரசுப்பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்பது இன்றுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கானல் நீராக போய்விட்டது.
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இது போன்று நல்ல திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டுகிறோம். வருகின்ற கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் ஆறாவது பாடமாக கொண்டு வந்து அவரது பிறந்த நாளை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தோற்றுவித்த நாளாக கொண்டாட வேண்டுகிறோம்.
மேலும் இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.