தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021- 22 கல்வியாண்டிற்கான முதுநிலை மாணவர் சேர்க்கை செப்டம்பர் 8ம் தேதி துவங்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை –
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு 35 துறைகளுக்கும், முனைவர் பட்டப்படிப்பு 30 துறைக்களுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளுர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 8ம் தேதி (புதன்கிழமை) அன்று முதல் தொடங்குகிறது. இவ்வாண்டிற்கான மாணவர் சேர்க்கை இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பித்தல் மற்றும் நுழைவு தேர்வு நடைபெறும்.

மாணவர் சேர்க்கை முழுவிவரம்
பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்தல் மற்றும் சேர்க்கை அறிவிப்பிக்கான நாள் செப்டம்பர் 8ம் தேதி.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (இணையதளம் மூலமாக) முதுநிலை படிப்புகளுக்கு செப்டம்பர் 30ம் தேதியும், முனைவர் படிப்புகளுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் (தற்காலிகமாக) முதுநிலை படிப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி, முனைவர் படிப்புகளுக்கு டிசம்பர் 24ம் தேதி வரை.
மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரி தொடங்கும் நாள் முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி, முனைவர் படிப்புகளுக்கு ஜனவரி 3ம் தேதி.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.