You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Initials and Signature Government Order Download| முன் எழுத்து தமிழில் எழுத வேண்டும் - கல்வித்துறை உத்தரவு

Tamil medium education

Tamil Initials and Signature Government Order Download |முன் எழுத்து தமிழில் எழுத வேண்டும் - கல்வித்துறை உத்தரவு.

தமிழ் வளர்ச்சி துறை இயக்குநாின் கடிதத்தில், 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கையில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொது மக்களுக்கு பொது பயன்பாடுகளில் இம்முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ் ஆட்சி மொழி சட்டத்தினை, முழுமையாக செயல்படுத்தும் நோக்கில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Initials and Signature Government Order Download

முதல்வா் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமாறு ஏற்கனவே பிறக்கப்பட்ட அரசாணைகள் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

தொட்டில் பழக்கம் என தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர, மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும், மேலும் மாணவர்கள் கையொப்படும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.

ALSO READ THIS: அரசு ஊழியர் வாாிசுகள் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசாணை

தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களின் பெயர்கள் குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையும் தமிழிலேயே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அரசு துறைகளில், பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில் படும் வகையில் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும், முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும், தமிழில் கையொப்பமிடுவதை பெருமிதப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டவாறு சுவரொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil initials and signature governemnt order
Tamil initials and signature governemnt order
மேற்படி, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தவறாது நடைமுறைப்படுத்த வேண்டும்.  இவ்வாறு தொடக்க கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tamil Initials and Signature Government Order - Download Here