You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தமிழக முதல்வர் வீடு முன்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், ஆசிரியர் வீடு, அரசு பள்ளியில் திருட்டு,

|

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்களும், பணி நியமனம் வழங்க கேட்டு பட்டதாரி ஆசிரியர்களும் தமிழக முதல்வர் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு அங்கு கூடிய அவர்கள், முதல்வர் புகைப்படம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு காத்திருந்தனர். முதல்வர் இவர்களை பார்த்தபடி காரில் சென்றதால், அப்போது ஒரு சிலர் மறியல் செய்ய முயற்சித்தனர், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

கோவை ராமநாதபுரம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பால் ரோஷன், கொரோனா ஊரடங்கின்போது, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார். அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் நிலையில், மன உளைச்சல் அடைந்த மாணவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.  

கரூர் குமரன் பார்க் பகுதியை சேர்ந்தவர் விழி, அரசு பள்ளி ஆசிரியையான இவர் மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில், முன்பக்க கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

மாநில உரிமைகளுக்கு விரோதமாக – கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் முதுநிலை சட்ட கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்ஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் இத்தேர்வு சென்னையில் மட்டும் நடக்கிறது. கடும் சோதனைக்குபின் தேர்வர்கள தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் நிலை தேர்வு 24 நகரங்களில் நடக்கிறது.

மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து, பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் மாநில தலைவர் இளமாறன் வலியுறுத்தி உள்ளார்.

சிலம்பம் கலையை பாதுகாக்கவும், இன்றைய தலைமுறையிடம் எடுத்து செல்லவும், வேதாரண்யம் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த சிலம்ப ஆசிரியர் கோபால் தனது 65 வயதிலும் அப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்து வருகிறார். இவரது செயலுக்கு அப்பகுதி மக்களிடம் பாராட்டு குவிந்து வருகிறது.

மன்னார்குடி கோட்டூர் மங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புதிய டி.வி, லேப்டாப், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதுதவிர, ஒரு அரிசி மூட்டையும் திருடிச் சென்றுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் அமுதா புகாரின் பேரில், கோட்டூா் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்திருப்பது தவறான முன்னுதாரணம் என்று அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கான விவரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி முதல்வர், தாளாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.