Tami Nadu Government Post Recruitment Latest News | 55 ஆயிரம் காலிபணியிடங்கள் நிரப்பப்படும்
Tami Nadu Government Post Recruitment Latest News
நடப்பாண்டில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மேலும் உணவு உள்ளிட்ட சேவைகளை வீடுகளுக்கே சென்று அளிக்கும் சேவை வழங்குநர்களுக்கென தனியார் வாரியாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை செயலக முகப்பில் தேசிய கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை ஏற்றினார். பின்னர் அவர் மேடையில் நின்றபடி, மக்களுக்கு அவர் நிகழ்த்திய உரை
அரசு ஊழியர்களின் பனிச்சுமையை கருத்தில் கொண்டு நிகழாண்டில் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 55 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி பல்வேறு நகரங்களிலும் உணவு மற்றும் பல சரக்கு உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் சேவை வழங்குநர்களின் ஒட்டுமொத்த நலன்களை காக்கும் வகையில் அவ்ாகளுக்கு என தனியாக நல வாரியம் உருவாக்கப்படும்.
ஒய்வூதியம் உயர்வு
இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஒய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் இருந்து குடும்ப ஓய்வூதியமானது ரூ 10 ஆயிரத்தில் இருந்து ரூ11 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும என்றார் முதல்வர்.