கல்லூரிகளில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அகில இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் காவல் நிலையங்களில் 950 மரணங்கள் நடந்துள்ளது. முதல்வர், மு.க.ஸ்டாலின், இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் உயிர் இழக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. காவலர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப்பகுதிகளில் மட்டும்தான் உள்ளது. அதையும் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையில் சேர 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும், இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.