அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி – மாணவர்களை மகிழ்விக்கும் மழலையர் வகுப்பு|The Secret of Suriyampalayam Municipality Middle School Victory

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி – மாணவர்களை மகிழ்விக்கும் மழலையர் வகுப்பு | The Secret of Suriyampalayam Municipality Middle School Victory

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கற்றல் செயல்பாடுகளால் குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்வி கற்கிறார்கள்.

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி
சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள்

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்னுரை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கல்வி மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியத்தில் சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த 2018 -2019ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், மழலையர் வகுப்புகளான LKG, UKG பிரிவுகளை துவங்க உத்தரவிட்டது.

அதன்படி, சூரியம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டன. துவக்கத்தில், 37 குழந்தைகளுடன் செயல்பட தொடங்கிய இந்த பிரிவில், இடைநிலை ஆசிரியர் மு.செல்வராணியின் பல்வேறு கற்றல் செயல்பாடுகளால், குழந்தைகள் எண்ணிக்கை கனிசமாக 100ஐ தாண்டியுள்ளது. காரணம், பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, இடைநிலை ஆசிரியர் செல்வராணியின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் அவர்களது பங்களிப்பு. இதனால், மழலையர் வகுப்புகள் இடைநிலை ஆசிரியரால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பாடுகள்

மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்ட போது, செல்வராணியின் நோக்கம் குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்பதே. மாணவர்கள் ஆர்வத்திற்கு ஏற்ப, குழந்தைகளின் கொஞ்சும் மழலை மொழியை மெருகேற்றும் நோக்கில், ஆசிரியர் தனது சொந்த செலவில், 50 மழலை பாடல்கள் அடங்கிய புத்தகம், அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கினார். இது, குழந்தைகள் மத்தியில் பாடலின் மீதான ஆர்வத்தையும் தூண்டியது என அவர் கூறுகிறார்.

விளையாட்டு செயல்பாடுகள்

தொடர் செயல்பாடுகளால், 2019 -2020ஆம் கல்வியாண்டில் குழந்தைகள் சேர்க்கை 58 ஐ எட்டியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட பல வகையான விளையாட்டு பொருட்கள் மற்றும் குறிப்பேடுகள் அதாவது தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து பயிற்சி புத்தகங்கள், MATCHING BOARD, ABCD IDENTIFICATION MATS, HORSE TOYS, ELEPHANT WITH TENNIKOIT COLOUR BOXES பயன்படுத்தி கற்றல் செயல்பாடுகளை வழங்கி வருகிறார்.

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கற்றல் செயல்பாடுகள்
சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கற்றல் செயல்பாடுகள்

இந்த விளையாட்டு பொருட்கள் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கும்போது, அவர்கள் ஆர்வத்துடன் ABCD அடையாளம் காணுதல், உருவங்களை சேர்த்தல், கவனம் மற்றும் கூர்சிந்தனை, வண்ணங்கள், உருவ அமைப்புகள், மற்றும் பொருட்களின் அளவுகளை எளிதில் அறிதல் உள்ளிட்டவை எளிமையாக கற்றுக்கொள்வதாக செல்வராணி தெரிவிக்கிறார். இதனால், பள்ளிக்கு வரும் ஆர்வம் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

READ ALSO: மழலையர் கல்வி (அல்லது) முன்பருவ கல்வி என்றால் என்ன? (Pre – Education)

பணியிடை பயிற்சி

2019-2020ஆம் கல்வியாண்டில் மழலையர் வகுப்பை கையாளும், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 3 நாட்கள் பணியிடை பயிற்சி, முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் கல்வித்துறையால் வழங்கப்பட்டது.

அந்த பயிற்சியில், மழலையர் வகுப்பிற்கான பாட கால அட்டவணை மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறையால் முறையாக வகுக்கப்பட்ட பாடதிட்டங்கள் பற்றிய விளக்கங்கள், மழலை வகுப்புகள், குழந்தைகளை எவ்விதம் வகுப்பறை அன்புடன் கையாள வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள், கற்றல் செயல்பாடுகளுக்கு பெரும் உதவியாக இருந்தது என அவர் தெரிவிக்கிறார்.

பெற்றோர்களுடன் சுமூக உறவு

இடைநிலை ஆசிரியர் செல்வராணி மழலையர் வகுப்பிற்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டவுடன் முதலில் பெற்றோர்களுடன் நட்பு பாலத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதோடு மட்டுமின்றி, உடல் மற்றும் உள நலன் மீது அக்கறை செலுத்தினர். இது பெற்றோர் மத்தியில் அதீத நம்பிக்கை, உயரிய நல்ல மதிப்பையும் அவர் மீது ஏற்படுத்தியது. இது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றது. பெற்றோர்கள் குறைந்தபட்சம் பள்ளி செயல்பாடுகளில் தொடர்புபடுத்தி கொண்டால் மட்டுமே பள்ளி வளர்ச்சிக்கும், குழந்தையின் கல்விக்கும் உறுதுணையாக இருக்க முடியும் என்றும், பெற்றோர் பள்ளி செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது மாணவர்கள் கல்வியை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

தங்கள் குழந்தைகள் வகுப்பறையில் என்ன கற்கிறார்கள் என்பதை பெற்றோர் நிச்சயம் அறிய வேண்டும். அதன்படி ஆசிாிய செல்வராணி, மழலையர் வகுப்புகள் துவங்கியுடன் பெற்றோர்களை ஒருங்கிணைத்து வாட்சப் குழு ஒன்று தொடங்கினார். வகுப்பறையில் நாள்தோறும் நடக்கும் கற்றல் செயல்பாடுகளை பெற்றோர் அறியும் நோக்கில் அதனை வாட்ஸப் குழுவில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். பெற்றோர்கள் தங்களது குழந்தையின் கல்வியில் சங்கிலி தொடராக இருக்கிறார் என்று அவர் தெரிவிக்கிறார்.

சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி குழந்தைகள்
சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி குழந்தைகள்

ஒவ்வொரு மாத இறுதி வெள்ளியன்று நேரடியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளி வளர்ச்சி, கற்றல் செயல்பாடுகள் குறித்து அவர் கலந்துரையாடுகிறார். இது, பள்ளிக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். இதன் விளைவாக, மழலையர் பிரிவில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் – ஆசிரியர் முதல் கூட்டத்தில், பள்ளியின் தேவையை அறிந்து, பெற்றோர்கள் வகுப்பிற்கு தேவையான பாய், சார்ட், வரை படங்கள், ஆகியவற்றை வழங்கி உதவி செய்தனர்.

2020-2021 கல்வியாண்டிற்கான சிறப்புகள்

2020-2021ஆம் கல்வியாண்டில் மழலையர் வகுப்பறைக்கு தேவையான குழந்தைகள் அமர்வதற்கும், எழுதுவதற்கும் பயன்படும் வகையில் மேசைகள், மாலை நேர விளையாட்டிற்கான லேடா் மற்றும் சிலைடர், 100 கலர் பந்துகள், 24இன்ச் ஸ்மார்ட் டிவி, நீதிக்கதைகள் அடங்கிய குறுந்தகடு தொகுப்பு, பென்டிரைவ் போன்ற பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனால், குழந்தைகள் ஆர்வத்துடன் தங்களது கல்வியை தொடர்கின்றனர். பெற்றோர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், மாணவர்கள் எண்ணிக்கை 58லிருந்து 100ஐ நோக்கி நகர்ந்தது.

கொரோனா காலத்தில் கல்வி செயல்பாடு

கொரோனா தொற்று காலத்தில், நாள்தோறும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வீடியோ வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், மழலையர் வகுப்பு குழந்தைகள் 100 பேருக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய பாடங்களை, நாள்தோறும் ஒரு பாடம் வீதம் கலந்துரையாடலில் ஆன்லைன் வீடியோ மூலம், ஆசிரியை செல்வராணி பாடம் நடத்தி, கல்வி செயல்பாடுகளை குழந்தைகளுக்கு உறுதி செய்தார்.

CLICK HERE : SCHOOL LOCATION

முடிவுரை

மேலும், இந்த பள்ளியின் வளர்ச்சியை நோக்கி பெற்றோர் பங்களிப்புடன் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயணிக்கும் நிலையில், பள்ளியின் மீது தங்களது மேலான கருத்துகளை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

உங்கள் பள்ளி தொடர்பான செய்திகள், சாதனை கட்டுரை எங்களது இணையளத்தில் இடம் பெற தொடா்பு கொள்ளவும்* – www.tneducationinfo@gmail.com

Related Articles

Latest Posts