பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதபூைஜ செய்யக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி எச்சாித்துள்ளார்.
குறிப்பாக, ஒரு சில அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் பொதுத்தேர்வு நடக்கும் முன்பு, மாணவர்கள் பொதுத்தேர்வில் நன்றாக தேர்வு எழுத வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் வேண்டி, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்வது வழக்கம். இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர்கள் பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு புகார் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. அதில் பாதபூைஜ நடத்துவது ெகாடுமையானது எனவும், மாணவா்கள் சுயமரியாதைக்கு எதிரானது எனவும், இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என அவர்கள் தொிவித்தாக கூறப்டுகிறது. முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யக்கூடாது, வற்புறுத்தினால், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.