போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்தின்கீழ் மாணவர்கள் விண்ணபிக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக்
(பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவி தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் வரும் 13.1.2021 அன்று வரை திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடா் மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதேபோன்று, மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக்
(ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவி தொகை திட்டத்திற்கான இணையதளமும் திறக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் மேற்கண்ட திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே மாணவர்களும், தங்களது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் 13.01.2022க்குள் கல்வி இணையதள
(escholarship.tn.gov.in) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி, கல்லூாிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) மூலமாக மாணவர்களுக்குரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், மாணவர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளிமின்றி பதிவேற்றம் செய்திடவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.