You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

மாணவி பத்தாம் வகுப்பு பெயில், பிளஸ் 2 பாஸ் - கல்வித்துறை அபாரம்

school education department noc for tet teachers

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்ற மாணவிக்கு, 11ஆம் வகுப்பில் மாணவர் சோ்க்கை நடத்திய விவகாரத்தில் நீலகிரி மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு பட்டியலின மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றார். பின்னர், அறியாமை காரணமாக, நீலகிாி மாவட்டம் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அணுகியுள்ளார்.

தலைமை ஆசிாியையின் கவனக்குறைவும், அலட்சியம் காரணமாகவும், அந்த மாணவிக்கு 11ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார். அந்த மாணவியும், 11 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், அந்த மாணவி கல்லூரி சோ்க்கைக்கு செல்லும்போது, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, கல்லூரியில் சேர முடியும் என முதல்வர் கூறியபின்னர்தான், மாணவி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என உணர்ந்தார். பின்னர், அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, கூலாக, பத்தாம் வகுப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளார். 

தற்போது இந்த விவகாரம் வெளியே வரவே, சமூக ஆர்வலர்கள், குழந்தைநேய ஆர்வலர்கள் கல்வித்துறைக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது முழுமுழுக்க கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறையின் தவறே எனவும், அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த நிலையில், கல்வித்துறை உத்தரவின்பேரில், நீலகிரி முதன்மை கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார் மாணவி, முன்னாள் தலைமை ஆசிரியையிடம் விசாரித்து வருகிறார்.