Student face difficulty in basic Maths | அடிப்படை கணிதம் திணறும் மாணவர்கள்
Student face difficulty in basic Maths
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் 5,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களால் அடிப்படை கணக்குகளை சரியாக செய்யும் திறன் பெறவில்லை என்றும், அதேபோன்று, ஆங்கில வாசிப்பிலும் பின்தங்கியுள்ளனர் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம் எனும் கல்வி அமைப்பு 2006 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் கல்விதிறனை ஆய்வு செய்து ஆண்டுத்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை (ஏஸர்) என்று அழைக்கப்படுகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான ஏஸர் கல்வி அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் உள்ள 616 கிராமப்புற மாவட்டங்களில் 6.9 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 30,737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி கொரோனா காலத்திற்கு பின், தமிழகத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை 99.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளில் சேர்க்கை 75.7 சதவீதமாக உள்ளது. இது 2018 ஆம் ஆண்டை விட 8.3 சதவீதம் அதிகம். அதேபோல, 2019 ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு சதவீதமாக குறைந்துள்ளது.
Read Also: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரோனா சர்வே
தமிழக கிராமப்புறங்களில் 8ஆம் வகுப்பில் 37 சதவீதமும், 5 ஆம் வகுப்பில் 75 சதவீதமும், 3 ஆம் வகுப்பில் 95 சதவீத மாணவர்கள், 2ஆம் வகுப்பில் புத்தகங்களை படிக்க இயலாதவர்கள் உள்ளனர். மேலும் அடிப்படை கணிதத்தைப் பொருத்தவரை 5 ஆம் வகுப்பில் 85 சதவீதம் பேரும், 8ஆம் வகுப்பில் 55 சதவீதம் மாணவர்களாலும் அடிப்படை கணக்கு விதிகளான கூட்டல், கழித்தல், வகுத்தல் சரியாக செய்ய முடியவில்லை. ஆங்கில வாசிப்பு திறனிலும் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.
இதுதவிர 2018ல் 91.1 சதவீதமாக இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் மதிய உணவுத்திட்டம் 99.6 சதவீதம் மாணவர்களுக்கு சென்றடைகிறது. 9.2 சதவீதம் பேருக்கு குடிநீர் வசதியும், 1.2 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை. கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் 16 சதவீத கழிப்பறைகள் உள்ளன. மேலும் 20 சதவீதம் பள்ளிகளில் நூலக வசதியும் இல்லாததும், 56 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி வசதி இல்லாததும்
அந்த கல்வி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.