You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

STEM Concept in Tamil | Vanavil Mandram | அரசு பள்ளி வானவில் மன்றம்

Typing exam apply Tamil 2023

STEM Concept in Tamil | Vanavil Mandram | அரசு பள்ளி வானவில் மன்றம்

STEM Concept in Tamil

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

அரசு பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளா்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM (Science Technology Engineering and Mathematics) Concept திட்டம். அதாவழ, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இணைந்த செயல்திட்டமாகும். இத்திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

Read Also: அறிவோம் சுற்றுச்சூழல் மன்றம்

STEM-இன் பாிணாம வளர்ச்சி

  • சுமார் 12 ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தாமாக முன்வந்து இந்ததிட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட விருப்பம் தெரிவித்தனா்
  • தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கலந்துரையாடலில் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணித கற்றலை மிகவும் எளிமையாகவும் திறமையாகவும் நிகழ்வுகளை அமைக்க ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கடினமானவை என கருதப்படும் தலைப்புகளை பட்டியலிட்டனர்.
  • இந்த பாிந்துரைகள் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் செயல் திட்டங்கள் வகுக்க பயன்படுத்தப்பட்டன.
  • கேள்வி கேட்பது மற்றும் ஆராய்வதன் மூலம் மாணவர்கள் திறம்பட கற்க தொடங்கினர் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
  • ஒரு சில ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரே கோட்பாட்டிற்கான ஆய்வுகளை பல்வேறு விதமான மாற்று பொருட்களை கொண்டு தமது ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றனர்.
  • மேலும் பள்ளியை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வீடுகளில் சோதனைகளை செய்ய தொடங்குகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

செயல்வழி கற்றல்

ஆர்வமும், செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இத்திட்டத்தினை பள்ளிகளில் செயல்முறையாக செய்து மாணவர்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவாா்கள். தேவையான துறை கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள். இக்கருத்தாளர்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளை செய்து காட்டி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி செய்து கற்கும் அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ள உதவியாக செயல்படுவார்கள். அன்றாட சூழ்நிலையில் காணப்படும் அறிவியல் தொடர்பான நிகழ்வுகள் குறித்த உரையாடல்கள் அதிக அளவில் அமையும் வகையில் இத்திட்ட கருத்தாளர்களும் ஆசிரியர்களும் இணைந்து வகுப்பறையில் செயல்படுவார்கள்.

வானவில் மன்றம் துவக்குதல்

  • அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (13,210) 28.11.2022 பிற்பகல் 2 மணிக்கு வானவில் மன்றம் துவக்கப்பட வேண்டும்
  • இந்த மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்
  • உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் துவக்க விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும்
  • துவக்கத்தின் அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில் பறக்கவிடலாம். 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு வகுப்பறைக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ1200 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களின் பணிகள்

  • ஆசிரியர்கள் தானே சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களையும் சோதனைகளை செய்ய ஆர்வமூட்ட வேண்டும்
  • ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புைடய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காட்ட வேண்டும்
  • குழந்தைகளை கேள்விகளை கேட்க ஊக்குவிக்க வேண்டும்
  • மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வம் உள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்
  • ஸ்டெம் கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தின் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்
  • கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
  • அறிவியல் நிறுவனங்களுக்கு களப் பயணம் ஏற்பாடு செய்யப்படும்போது, மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.