மோசமான மற்றும் கணிக்கமுடியாத வானிலை காரணமாக, பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சற்று முன் தெரிவித்துள்ளார்.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நாளை கோவையிலும், 6முதல் 8ஆம் வகுப்பு வரையிலான போட்டிகள் திருப்பூரிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், 9 மற்றும் 10 மாணவர்களுக்கு இன்றும், நாளையும் ஈரோட்டிலும், அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும், நாளை நாமக்கல் மாவட்டத்திலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கிடையில் இந்த போட்டியில் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6ம் தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.