Stalin Inspect at School | அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
Stalin Inspect at School
முதல்வர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று வேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அத்துடன் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
Read Also: பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி அறிவிப்பு
அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வேலூர் அலமேலுமங்காபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அங்குள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியாக உள்ளதா என அவரே உண்டு ஆய்வு செய்தார். அதே சமயம் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவு பரிமாறினார். இதனையடுத்து இன்னும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.