தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி), பொள்ளாச்சி அளித்த மனு அளித்துள்ளனர்.
ஒரு சில ஆசிரியர்கள் கூறும்போது, ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கணித பட்டதாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் தேர்வு நிலை பெற்றப்பின், அதற்கான பண பலன்களை பெற, வட்டார கல்வி அலுவலகத்தை அணுகியுள்ளார். அதன்படி, அவ்வலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர் லஞ்சமாக ரூ 3,000 கேட்டுள்ளார். ஆசிரியர் அந்த பணத்தை ஜிபே மூலம் வழங்கியுள்ளார். தற்போது, லஞசம் கேட்டதற்கான குரல் பதிவு மற்றும் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. தற்போது கல்வி அதிகாரிகள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலா் லஞ்சம் கேட்ட ஊழியரை காப்பாற்றும் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.