ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி- தமிழ்த்துறையின் "சிரிப்போம் சிந்திப்போம் மன்றம்" சார்பில் "புதையல்" எனும் பொருண்மையிலான சிறப்பு அருங்காட்சியகப் பார்வையரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
"புதையல்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொல்லியல் ஆய்வாளரும், கோவை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாளருமான கோ.அ.முருகவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழகத் தொல்லியலில் கொங்குநாட்டின் பெரும்பங்கு எத்தகையது என்பது பற்றியும், கொங்குநாட்டின் பண்டைய கால வாணிபம், பெருவழிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சித்திரங்கள்,கைவினைப் பொருட்கள்,சுடுமண் சிதைகள், கோவில்கள், சிற்பங்கள், மற்றும் கொங்குநாட்டு மக்கள் வாழ்க்கை முறை ஆகியன பற்றி மிகவும் தெளிவாக ஆவணங்களுடன் விளக்கிக் கூறினார்.
பேரா. கா.விக்னேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மிகுந்த பயனுள்ள வகையில் இந்த நிகழ்வு அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.